திண்டுக்கல்: கொரோனா ஒவ்வொரு நாளும் ஏழை முதல் பணக்காரர் வரை எல்லோரும் கடும் துயரத்தை ஏற்படுத்தி வருகிறது. தற்போது திண்டுக்கல்லை சேர்ந்த 22 வயதே ஆன மருத்துவ உதவியாளர் உயரிழந்தது பொது மக்களுக்கு எச்சரிக்கை ஏற்படுத்துகிறது.
கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் உதவியாளராக பணியாற்றியவர் திண்டுக்கல் எரியோடு அருகே ரத்தினகிரியூரைச் சேர்ந்த கணேசன். கொரோனா பரவல் துவங்கியது முதல் சில மாதங்களாக தடுப்பு பணியில் ஈடுபட்டு வந்துள்ளார்.இரு வாரங்களுக்கு முன்பு காய்ச்சல் ஏற்பட்டு, பரிசோதனையில் கொரோனா உறுதி செய்யப்பட்டது.
ஒரு வாரம் சிகிச்சையில் இருந்த அவர் ஜூன் 23ம் தேதி உயிரிழந்தார். கணேசன் உழைப்பிலேயே அக்குடும்பம் இருந்துள்ளது. இதனால் அவரையே நம்பி இருந்த பெற்றோர்,
3 சகோதரிகள் நிர்க்கதியாகிவிட்டனர்.ஆரோக்கியமான இளம் வயது கணேசன் போன்றோரின் உயிரிழப்பை பார்த்தாவது, பொதுமக்கள்அலட்சியம் செய்யாமல்அரசு கூறும் விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்.
மருத்துவ இணை இயக்குநர் சிவக்குமார் கூறியதாவது: ஆரோக்கியமான சிறு வயது வாலிபர்களையே கொரோனா காவு வாங்கும்போது, பொதுமக்கள் அலட்சியமாக நடப்பது சரியல்ல. அரசு கூறும் பாதுகாப்பு அம்சங்களை கட்டாயமாக கடைபிடிக்க வேண்டும். அடிக்கடி சோப்பால் கைகழுவி, பொது இடங்களில் சமூகவிலகலை பின்பற்ற வேண்டும். தேவையின்றி வீட்டைவிட்டு வெளியில் வரவேண்டாம். வெளியூரில் இருந்து வருவோர் பற்றி எங்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE