சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தினமலர் செய்தியால் 'சரண்டர்' ஆன தொற்றாளர்

Added : ஜூன் 26, 2020
Share
Advertisement

வத்தலக்குண்டு:தினமலர் செய்தி எதிரொலியாக கொரோனா 'பாசிட்டிவ்' நபர் சுகாதாரத் துறையை தொடர்பு கொண்டதால் பிரச்னை தீர்ந்தது.

கர்நாடகாவிற்கு சென்று வந்த கார் டிரைவர் தாமாக முன் வந்து தேனி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் தன்னை சோதனைக்கு உட்படுத்தினார். வத்தலக்குண்டு சுகாதாரத் துறை யினருக்கு முடிவு 'பாசிட்டிவ்' என தகவல் கிடைத்தது.அவர்கள் கார் டிரைவரை 3 நாட்களாக தேடி வந்தனர்.இச்செய்தி தினமலர் நாளிதழில் வெளியானது.

இதுபற்றி அக்கம், பக்கத்தினர் சம்பந்தப்பட்ட நபரிடம் பேசியபோது, அந்த நபரே சுகாதாரத் துறையை தொடர்பு கொண்டு பேசி திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு சென்றார்.மருத்துவக் கல்லுாரியில் இருந்து தகவல் வராததால் தனக்கு 'நெகட்டிவ்' ஆக இருக்கலாம் எனக் கருதி நேற்று முன் தினம்தான் ஊரில் இருந்த மனைவியை அழைத்து வந்ததாக கூறினார். சுகாதார துறையினர் அவரை பரிசோதனைக்காக அழைத்துச் சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X