சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மனைவியை அடித்து கொல்லமுயன்ற கணவர் தற்கொலை

Added : ஜூன் 26, 2020
Share
Advertisement

எரியோடு:எரியோடு அருகே மனைவியை அடித்துக் கொல்ல முயன்ற கணவர், போலீசுக்கு பயந்து தற்கொலை செய்து கொண்டார்.

எரியோடு அருகே மலைப்பட்டியை சேர்ந்தவர் பெரியசாமி 60. இவரது மனைவி பூபதி 52. தம்பதியர் இருவரும் எம்.ஜி.ஆர்., நகரில் தனியே வசித்தனர்.நேற்றுமுன்தினம் இரவு மது குடிக்க பணம் கேட்ட தகராறில், பெரியசாமி தனது மனைவி பூபதியை கட்டையால் தாக்கினார். மனைவி மயங்கியதால், பயந்துபோன பெரியசாமி அதே வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்தார்.

கதவு, ஜன்னல்கள் அடைக்கப்பட்டு வீட்டுக்குள் 'டிவி' அதிக சத்தத்துடன் இயங்கியதால், அப்பகுதியினர் சந்தேகமடைந்தனர். வீட்டின் மின்சப்ளையை துண்டித்தபோது, வீட்டினுள் முனகல் சத்தம் கேட்டுள்ளது. கதவை உடைத்து பார்த்தபோது விவரம் தெரிந்தது. அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட பூபதியின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. எரியோடு போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X