தேர்வு எழுதாத மாணவர்களிடம் விளக்கம் கேட்கும் பள்ளிகள் | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தேர்வு எழுதாத மாணவர்களிடம் விளக்கம் கேட்கும் பள்ளிகள் 

Updated : ஜூன் 26, 2020 | Added : ஜூன் 26, 2020
Share

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் பிளஸ் 2 இறுதி தேர்வை எழுதாத மாணவர்களிடம் விளக்கம் கேட்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு மார்ச் 2 முதல் 24 வரை நடந்தது. திண்டுக்கல்லில் 9 ஆயிரத்து 594 மாணவர்கள், 10 ஆயிரத்து 906 மாணவிகள் மொத்தம் 20 ஆயிரத்து 500 பேர் தேர்வு எழுதினர். கொரோனா வைரஸ் வேகமாக பரவியதால் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. இதனால் மார்ச் 24 ம் தேதி நடந்த வேதியியல், கணக்கியல், நிலவியல் பாடங்களுக்கான தேர்வை ஏராளமான மாணவர்கள் எழுத முடியாமல் போனது.

இம்மாணவர்களுக்கு, ஜூனில் அத்தேர்வை நடத்த திட்டமிட்டனர்.கொரோனா தாக்கம் குறையாததால் மீண்டும் தேர்வு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல்லில் இறுதித்தேர்வை 1,027 மாணவர்கள் எழுதவில்லை. மாணவர்கள் தேர்வு எழுத முடியாமல் போனதன் காரணம் குறித்து தலைமையாசிரியர்கள் மூலம் விவரம் சேகரிக்கப்படுகிறது. மாணவர்கள் அலைபேசி வாயிலாக தங்கள் ஆசிரியர், தலைமையாசிரியரிடம் காரணத்தை தெரியப்படுத்தலாம். இல்லையெனில் கடிதமாகவும் எழுதி பள்ளியில் ஒப்படைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X