பொது செய்தி

தமிழ்நாடு

கொடைக்கானல் சாதனை மாணவருக்கு பிரதமர் பதில்

Added : ஜூன் 26, 2020
Share
Advertisement
 கொடைக்கானல் சாதனை மாணவருக்கு பிரதமர் பதில்

கொடைக்கானல்:கொடைக்கானலை சேர்ந்த பிரசன்னன் தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கிறார். 2018 ல் 'ஸ்பிட்சஸ் ஸ்பின்னர்' விளையாட்டில் கின்னஸ் சாதனை படைத்தார்.

சமீபத்தில் கொரோனா வைரஸ் ஊரடங்கு நேரத்தை பயன்படுத்தி, தான் வரைந்த ஓவியத்தை செஞ்சிலுவை அமைப்புக்கு ரூ.25 ஆயிரத்திற்கு விற்று, அத்தொகையை தமிழக முதல்வர் கொரோனா நிவாரண நிதியாக வழங்கினார்.ஊரடங்கு நேரத்தில் சேவை புரியும் டாக்டர், போலீஸ், துாய்மை பணியாளார், பத்திரிக்கையாளர், ஆம்புலன்ஸ் பணியாளர்களை ஓவியமாக வரைந்தும், கர்நாடக சங்கீதத்தில் கொரோனா பாடலை எழுதி பாடியும் பலரது பாராட்டைப் பெற்றார்.

சுற்றுச்சூழல் குறித்த வனத்துறை கட்டுரை போட்டியில் மரம் வளர்ப்பதின் முக்கியத்துவம் குறித்து எழுதிய கட்டுரையும் பாராட்டைப் பெற்றது. இக்கட்டுரையின் கருத்தை வலியுறுத்தி பிரதமர் நரேந்திரமோடி, தமிழக முதல்வர் பழனிச்சாமி, கேரளா முதல்வர் பினராயிவிஜயனுக்கு கடிதம் எழுதினார். இதற்கு, 'மாணவனின் கருத்தை வரவேற்று பரிசீலிப்பதாக' பிரதமர் பதில் கடிதம் எழுதியுள்ளார். மாணவர் பிரசன்னன் கூறுகையில், ''பிரதமர் வரவேற்று பதிலளித்தது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X