சம்பவம் செய்தி

தமிழ்நாடு

குடிநீர் பிரச்னையால் காலியாகும் சமத்துவபுரம்

Added : ஜூன் 26, 2020
Share
Advertisement
 குடிநீர் பிரச்னையால் காலியாகும் சமத்துவபுரம்

வடமதுரை:குடிநீர் பிரச்னைகளால் வடமதுரை கொல்லபட்டி சமத்துவப்புரத்தில் பாதிக்கும் மேற்பட்ட வீடுகள் பயனற்று பூட்டிக் கிடக்கின்றன.

வடமதுரை ஒன்றியத்தில் சமத்துவபுரம் அமைக்க கொல்லப்பட்டி அருகே மலைச் சரிவில் இடம் தேர்வு செய்யப்பட்டது. 2010 ஜூலையில் துவங்கிய சமத்துவபுர பணிகள் நிறைவடையும் முன்னரே அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்தது. அதன்பின் அதிகாரிகள் அக்கறை காட்ட தயங்கியதால் கட்டிய வீடுகள் பயனாளிகளிடம் ஒப்படைக்கப்படாமல் இருந்தது.

இதுகுறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானபின், பயனாளிகள் தேர்வு நடந்து வீடுகள் ஒப்படைக்கப்பட்டன. இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக இங்குள்ள குடிநீர் தட்டுப்பாடால் குடியேறிய பலரும் அங்கிருந்து வெளியேறிவிட்டனர். இதனால் 100 வீடுகளில் பாதியளவு வீடுகளில்தான் மக்கள் வசிக்கின்றனர்.

பாதுகாப்பற்ற சூழல்

எஸ்.மணிமுத்து:இங்கு போதிய நீர் ஆதாரம் இல்லாததால் வெகுதொலைவு சென்று, காவிரி குடிநீர் குழாயில் கசியும் நீரை பிடித்து வருகிறோம். டேங்கர் லாரிகளில் வரும் நீரை விலைக்கு வாங்கி சமாளிக்கிறோம். தண்ணீர் தட்டுப்பாடால் பெரும்பாலோர் வீடுகளை காலி செய்து விட்டனர். எஞ்சியுள்ளவர்கள் பாதுகாப்பற்ற சூழலில் அச்சத்துடன் வசிக்கிறோம்.

நிரந்தர தீர்வுக்கு வழி

கே.ஜெயக்குமார்:இப்பகுதியில் கடந்த 11 ஆண்டுகளாக போதிய மழை இல்லாததாலும், மலை சரிவில் மேடான பகுதியில் சமத்துவபுரம் இருப்பதாலும் ஆழ்துளை கிணறுகள் அமைத்தும் தண்ணீர் பெற முடியவில்லை. இவ்வழியே புத்துார் பகுதிக்கு செல்லும் காவிரி குடிநீர் திட்ட குழாயில் இருந்து சமத்துவபுர நீர்தேக்க தொட்டிக்கு இணைப்பு ஏற்படுத்தினால் குடிநீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு ஏற்படும்.அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X