அடிக்கடி உடையும் காவிரி குடிநீர் திட்ட குழாய்கள்

Added : ஜூன் 26, 2020
Share
Advertisement

வத்தலக்குண்டு:வத்தலக்குண்டு ஒன்றியத்திற்கு 15 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட கீழ்நிலை தொட்டி ரெட்டியபட்டியில் அமைந்துள்ளது.

இங்கிருந்து அனைத்து ஊராட்சிகளுக்கும் குடிநீர் குழாய்கள் மூலம் வினியோகம் ஆகிறது. ஒவ்வொரு முறையும் குழாய்களில் தண்ணீர் வெளியேற்றும் போதும் கீழக் கோவில்பட்டி, வெங்கடாஸ்திரி கோட்டை, விராலிப்பட்டி, மலையப்பன் பட்டி, கண்ணாபட்டி பகுதிகளில் உடைப்பு ஏற்படுகிறது.

குறிப்பாக சின்னுபட்டி, வெங்கடாஸ்திரிகோட்டை ரோட்டில் அடிக்கடி உடைப்பு ஏற்படுவதால் சமீபத்தில் அமைத்த ரோடும் குண்டும் குழியுமாகிவிட்டது. தரமற்ற குழாய், திட்டமிடுதல் இல்லாதது போன்ற காரணங்களால் இவ்வாறு உடைப்பு ஏற்பட்டு, குடிநீர் விநியோகம் பாதிக்கிறது. ஒன்றியம் முழுவதும் குடிநீர் பற்றாக்குறை நிலவுவதால் குழாய்கள் உடைவதை அதிகாரிகள் சரிசெய்ய வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X