பொது செய்தி

தமிழ்நாடு

வலைதளத்தில் 'கொரோனா' வதந்தி பரப்பினால் நடவடிக்கை

Added : ஜூன் 26, 2020
Share
Advertisement
 வலைதளத்தில் 'கொரோனா'  வதந்தி பரப்பினால் நடவடிக்கை

திண்டுக்கல்:கொரோனாவை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. பொதுமக்களிடம் விழிப்புணர்வு, ஒத்துழைப்பு இல்லாததால் தொற்று அசுர வேகத்தில் பரவி வருகிறது.

இந்நிலையில் சிலர் பேஸ்புக், வாட்ஸ் ஆப், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் கொரோனா குறித்து வதந்திகளை பரப்பி மக்களிடம் அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றனர். திண்டுக்கல்லிலும் சிலர் இந்த ஊரில் இவருக்கு கொரோனா என சமூக வலைத்தளங்களில் சித்தரித்து பரப்புகின்றனர். அதனால் அந்தப்பகுதி மக்கள் அஞ்சுவது மட்டுமின்றி, கொரோனா பணியும் பாதிகிறது. எனவே, வதந்தி பரப்பினால் பேரிடர் மேலாண்மை தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும். 24 மணி நேரமும் சமூக வலைதளங்கள் கண்காணிக்கப்படுகிறது என, போலீசார் எச்சரித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X