சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வேப்பூர் வனப்பகுதியில் வேலி அமைக்கப்படுமா?

Added : ஜூன் 26, 2020
Share
Advertisement

வேப்பூர் : வேப்பூர் வனப்பகுதியில் வன விலங்குகள் விபத்தில் சிக்கி இறப்பதை தடுக்க, கம்பி வேலி அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கடலுார் --சேலம் தேசிய நெடுஞ்சாலையையொட்டி உள்ள வேப்பூர் மற்றும் காட்டுமயிலூர் வனத்தில் மான், காட்டுப்பன்றி உள்ளிட்ட விலங்குகள் அதிகளவில் உள்ளன. நடப்பாண்டு போதிய பருவமழை இல்லாததால் வனத்தில் விலங்குகளுக்கு உணவு மற்றும் தண்ணீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால், வனத்தில் வசிக்கும் மான்கள் உணவு தேடி, அருகிலுள்ள கிராமங்களுக்கு தேசிய நெடுஞ்சாலையை கடந்து செல்கின்றன. அப்போது, அவ்வழியே வேகமாக வரும் வாகனங்களில் சிக்கி இறக்கின்றன.

மேலும், பாசன கிணறுகளில் தவறி விழுந்தும், மர்மநபர்களில் வேட்டையாடுதலிலும் வன விலங்குகள் பலியாகின்றன.வனத்துறை சார்பில் எச்சரிக்கை பலகைகள் அமைத்தும் எவ்வித பலனும் இல்லை. இதனால், வனத்தில் மான்களில் எண்ணிக்கை பெருமளவு குறைந்து வருகிறது. எனவே, வனத்தில் விலங்குகளுக்கு குடிநீர் வசதி ஏற்படுத்தவும், பாதுகாப்பிற்கு வனத்தையொட்டி கம்பி வேலி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X