சிறு வணிகத்திற்கு ரூ.50 ஆயிரம் கடனுதவிவிழுப்புரம் நகர கூட்டுறவு வங்கி தீர்மானம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சிறு வணிகத்திற்கு ரூ.50 ஆயிரம் கடனுதவிவிழுப்புரம் நகர கூட்டுறவு வங்கி தீர்மானம்

Added : ஜூன் 26, 2020
Share

விழுப்புரம் : விழுப்புரம் நகர கூட்டுறவு வங்கியில், தகுதியுள்ள அனைவருக்கும் சிறு வணிக கடனுதவி, ரூ.50 ஆயிரம் வழங்க தீர்மானிக்கப்பட்டது.

விழுப்புரம் நகர கூட்டுறவு வங்கி மாதாந்திர நிர்வாகக் குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. வங்கி தலைவர் தங்க சேகர் தலைமை தாங்கினார். மேலாண்மை இயக்குநர் நளினி, பொதுமேலாளர் குமார், துணை பொதுமேலாளர் ஜெயராமன் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், வங்கி நிர்வாக குழு உறுப்பினர் வழக்கறிஞர் செந்தில் பேசுகையில், கூட்டுறவு துறை அமைச்சர் அறிவித்தபடி, கொரோனா பாதிப்பில் இருந்து வியாபாரிகள் மீள சிறு வணிக கடனுதவியாக ரூ.50 ஆயிரம் வழங்குவதற்கு, துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

கூட்டத்தில், வங்கி இயக்குநர்கள் தனுசு, டாக்டர் கலைச்செல்வம், சம்பத், பாஸ்கர், தாயம்மாள், தயாளுபதி, ராஜேஸ்வரி ஆகியோர் பேசினர்.பின்னர், வங்கி தலைவர் தங்கசேகர் பேசுகையில்:தமிழக மக்கள், கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வருவதற்கு அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என முதல்வர் தெரிவித்துள்ளார். மேலும், கூட்டுறவு துறை அமைச்சர் செல்லுார் ராஜு அறிவித்தபடி, சிறு வணிக கடன்களை வழங்கிடுமாறு, சட்டத்துறை அமைச்சர் சண்முகம் அறிவுறுத்தியுள்ளார்.இதன்படி, தகுதி உள்ள நபர்களுக்கு சிறு வணிக கடன்கள் வழங்குவதற்கு, கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, கூட்டுறவு சங்கங்களின் சரக துணைப் பதிவாளர் அனுமதி பெறப்படும். மனுக்கள் பெறப்பட்டு பரிசீலனை செய்து, மிக விரைவில் சிறு வணிக கடன்கள் வழங்கப்படும் என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X