பொது செய்தி

தமிழ்நாடு

டோஸ்! கொரோனா தடுப்பு பணி ஆய்வில் கலெக்டர்...நோய் பரவினால் கடும் நடவடிக்கை என எச்சரிக்கை

Added : ஜூன் 26, 2020
Share
Advertisement

விழுப்புரம் : விழுப்புரம் மற்றும் திண்டிவனம் நகராட்சியில், கொரோனா தடுப்பு நடவடிக்கை பணிகளை கலெக்டர் அண்ணாதுரை ஆய்வு செய்தார்.

விழுப்புரத்தில் அலட்சியமாக இருந்த அதிகாரிகள் மற்றும் போலீசாருக்கு கலெக்டர் டோஸ் விட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.விழுப்புரம் நகராட்சிக்குட்பட்ட 36,690 வீடுகளிலும் மற்றும் திண்டிவனம் நகராட்சிக்குட்பட்ட 16,754 வீடுகளிலும் கொரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கைகள் 232 மருத்துவ பணியாளர்கள் மூலம் மேற்கொள்ளப்படுகிறது. மருத்துவப் பணியாளர்கள் தெர்மல் ஸ்கேனர் மூலம் பொதுமக்களின் உடல் வெப்பநிலையினையும், சளி, இருமல் மற்றும் காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் கண்டறியும் பணி மேற்கொண்டு வருகின்றனர்.

சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட்ட, 121 செவிலியர்கள் வாயிலாக விழுப்புரம் நகராட்சிக்குட்பட்ட வார்டு பகுதிகளில் கொரோனா அறிகுறிகள் கண்டறியும் பணி மேற்கொள்ளப்படுகிறது. விழுப்புரம் மாம்பழப்பட்டு ரோடு கமலா கண்ணப்பன் நகரில் நேற்று காலை மேற்கொள்ளப்பட்ட பணியை கலெக்டர் அண்ணாதுரை திடீர் ஆய்வு செய்தார்.அப்போது, அங்கு சுகாதாரத்து துறை குழுவினர் யாரும் பணியில் ஈடுபடவில்லை. இதைக்கண்ட கலெக்டர் , சுகாதாரத்துறை இணை இயக்குநர் செந்தில்குமாரிடம், பணியார்கள் எங்கே என கேட்டார். அதற்கு பணியாளர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டதால் தாமதம் ஏற்பட்டதாக அவர் கூறினர்.

பின், அவசர அவசரமாக ஒரு வாகனத்தில் சுகாதார குழுவினர் அங்கு வந்து பணியை மேற்கொண்டனர்.மேலும், அங்கு கொரோனா பாதித்த பகுதியில் போலீசார் அமைத்த தடுப்பு கட்டைகள் கீழே விழுந்து பாதுகாப்பற்ற முறையில் இருந்தது. இதைக்கண்ட கலெக்டர் மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரேவதி, சப் இன்ஸ்பெக்டர் ஞானசேகர் ஆகியோரிடம் தடுப்பு அமைக்க 13 லட்சம் ரூபாய் நிதி வழங்கப்பட்டுள்ளது.ஆனால், அலட்சியமாக போலீசார் செயல்படுகின்றீர்கள். இப்பகுதியில் மேலும் கொரோனா பரவல் ஏற்பட்டால், போலீசார் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று டோஸ் விட்டார்.

அங்கு, ஒலி பெருக்கி மூலம் கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என போலீசாருக்கு அறிவுறுத்தினார்.இதை தொடர்ந்து பழைய பஸ் நிலையம் பின்புறம் உள்ள பூ மார்க்கெட் பகுதியில் கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார். அங்கு காரில் இருந்து இறங்கியபோது, சாலையில் குப்பைகள் குவிந்து கிடந்தது தெரியவந்தது. அப்போது, நகராட்சி கமிஷனர் தட்சணாமூர்த்தியை அழைத்து குப்பைகளை அகற்றுமாறு கடிந்து கொண்டார்.திண்டிவனத்தில் ஆய்வுதிண்டிவனம் நகராட்சிக்குட்பட்ட அனைத்து வார்டு பகுதிகளிலும் 111 செவிலியர்கள் மூலம் கொரோனா அறிகுறிகளை கண்டறியும் பணி மேற்கொள்ளப்படுகின்றது.

இங்குள்ள பஜார் தெரு மற்றும் பெரியார் நகர் உள்ளிட்ட பகுதிகளை கலெக்டர் அண்ணாதுரை ஆய்வு மேற்கொண்டார்.அப்போது, மருத்துவ பணியாளர் மற்றும் நகராட்சி அலுவலர் ஆகியோரிடம் இப்பணிகளை மேற்கொள்ளும் செவிலியர்களுக்கு தேவையான பாதுகாப்பு உபகரணங்கள் நாள்தோறும் வழங்க உத்தரவிட்டார். தொடர்ந்து கடைவீதி பகுதிகளில் முக கவசம் அணிந்து வருபவர்களுக்கு மட்டுமே கடை உரிமையாளர்கள் மற்றும் வியாபாரிகள் பொருட்களை வழங்க வேண்டும்.

சமூக இடைவெளியை பின்பற்றி பொருட்களை விற்பனை செய்ய வேண்டும் என அறிவுறுத்தினார். கடைவீதியில் சமூக இடைவெளியை பின்பற்றாமல் பொதுமக்கள் கூட்டமாக நின்று பொருட்கள் வாங்குவதை கண்ட கலெக்டர், சம்மந்தப்பட்ட கடையினை சீல் வைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.திண்டிவனம் சப் கலெக்டர் டாக்டர் அனு, துணை இயக்குநர் செந்தில்குமார் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X