சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சாலை விபத்தில் வாலிபர் பலி

Added : ஜூன் 26, 2020
Share
Advertisement

திண்டிவனம் : திண்டிவனம் அருகே பைக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், வாலிபர் இறந்தார்.திண்டிவனம் அடுத்த சாலை கிராமத்தை சேர்ந்த ஜெயபால் மகன் சூரியபிரகாஷ், 21; இவர் நேற்று இரவு 8.00 மணியளவில், தனது நண்பர் ஈஸ்வரமூர்த்தி, 26; என்பவருடன் பைக்கில் தீவனுாரிலிருந்து சாலை கிராமத்திற்கு சென்று கொண்டிருந்தார். பேரடிக்குப்பம் கிராமத்தில் உள்ள சாலை திருப்பத்தில் சென்ற போது நிலை தடுமாறி பைக்குடன் சூரியபிரகாஷ் கீழே விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த அவர் உடன் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை 4.30 மணியளவில், இறந்தார்.விபத்து குறித்து, ரோஷணை போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X