பொது செய்தி

தமிழ்நாடு

காட்டுக்குள் சடலத்தை வீசும், 'வீடியோ' தனியார் மருத்துவ கல்லுாரி விளக்கம்

Added : ஜூன் 26, 2020
Share
Advertisement

திருச்சி: திருச்சி அருகே, இறந்தவர் உடலை, தனியார் மருத்துவமனை ஆம்புலன்சில் எடுத்துச் சென்று, காட்டுப் பகுதியில் வீசி செல்வது போன்ற, 'வீடியோ' வெளியாகி, பரபரப்பை ஏற்படுத்தியது.

திருச்சி மாவட்டம், சமயபுரம் அடுத்த இருங்களூரில், எஸ்.ஆர்.எம்., மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லுாரி உள்ளது. வீடியோ காட்சிஇங்கு இறந்த ஒருவரது உடலை, ஆம்புலன்சில் எடுத்துச் சென்று, காட்டுப் பகுதியில் வீசி செல்வது போன்ற வீடியோ காட்சி, நேற்று சமூக வலைதளங்களில் வெளியாகி, பரபரப்பை ஏற்படுத்தியது.இதையடுத்து, மருத்துவக் கல்லுாரி, 'டீன்' பாலசுப்பிரமணியன் வெளியிட்ட அறிக்கை:கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, எஸ்.ஆர்.எம்., மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, இறந்த ஒருவரது உடல், 16ம் தேதி பகல், 2:25 மணிக்கு, அரசு துறை அலுவலர்கள் மற்றும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. பின், மருத்துவமனை ஆம்புலன்சில் எடுத்துச் செல்லப்பட்ட உடலுக்கு, இருங்களூர் அருகே உறவினர்கள் முன்னிலையில், இறுதிச் சடங்குகள் நடத்தப்பட்டன.

தொடர்ந்து, அரசு பணியாளர்களை கொண்டு, அரசு விதிமுறைப்படி அடக்கம் செய்யப்பட்டது. அந்த நிகழ்வுகள், வீடியோ ஆவணமாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளன.ஆனால், அந்த வீடியோவை எடிட் செய்து, விதிகளை மீறியதாகவும், தவறு இழைக்கப்பட்டதாகவும் சித்தரித்து, தீய நோக்கத்தில், சமூக வலைதளங்களில் பரப்பி விட்டுள்ளனர்.அவமதிப்புமருத்துவ பணியாளர்களின் செயல்களை கொச்சைப்படுத்தி, அவமதிக்கும் வகையில், அந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

வீடியோவை தவறாக சித்தரித்து வெளியிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க, கலெக்டர், போலீஸ் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.டீன் அறிக்கையுடன், மருத்துவமனை தரப்பில் எடுக்கப்பட்ட வீடியோ பதிவையும் வெளியிட்டுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X