எலி பேஸ்ட் சாப்பிட்டுவாலிபர் தற்கொலை| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

எலி பேஸ்ட் சாப்பிட்டுவாலிபர் தற்கொலை

Added : ஜூன் 26, 2020
Share

விழுப்புரம் : மனைவி பிரிந்து சென்றதால் மனமுடைந்த, வாலிபர் எலி பேஸ்ட் சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

விழுப்புரம் விராட்டிக்குப்பத்தை சேர்ந்தவர் முகமது ரபீ, 28; இவரது மனைவி தன்னக் கிருதோஷ், 25; இவர்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கு முன் திருமணமானது. குழந்தை இல்லாததால் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.கடந்த நான்கு மாதங்களுக்கு முன் ஏற்பட்ட தகராறில், தன்னக் கிருதோஷ், புதுச்சேரி கருவாடிக்குப்பத்தில் உள்ள தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். இதனால், மனமுடைந்து காணப்பட்ட முகமது ரபீ, கடந்த 20ம் தேதி தனது வீட்டில் எலி பேஸ்ட் சாப்பிட்டு மயங்கி விழுந்தார்.அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் அவர் இறந்தார்.புகாரின்பேரில், விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X