சம்பவம் செய்தி

தமிழ்நாடு

புதுச்சேரி சிறையில் பரவும் தொற்று 'டவரில்' ஏறி கைதிகள் போராட்டம்

Added : ஜூன் 26, 2020
Share
Advertisement

புதுச்சேரி; புதுச்சேரி மத்திய சிறையில், கொரோனா தொற்று பரவியதை தொடர்ந்து, ஜாமினில் விடக் கோரி, கைதிகள் டவரில் ஏறி போராட்டம் நடத்தினர்.

புதுச்சேரி, காலாப்பட்டு மத்திய சிறையில், தண்டனை மற்றும் விசாரணை கைதிகள், 150க்கும் மேற்பட்டோர் உள்ளனர். சில நாட்களுக்கு முன், விசாரணை கைதி ஒருவருக்கு கொரோனா கண்டறியப்பட்டு, கதிர்காமம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அவருடன் இருந்த கைதிகள் தனிமைப்படுத்தப்பட்டனர். இதில், மேலும் இரு கைதிகளுக்கு, கொரோனா உறுதியானது. இதனால், பல கைதிகளுக்கு தொற்று பரவி இருக்கலாம் என அச்சம் ஏற்பட்டது.

நேற்று முன்தினம், 31 கைதிகள் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை துவக்கினர். சிறை வார்டன்கள் சமாதானம் செய்தும் பலனில்லை. உண்ணாவிரத போராட்டம், நேற்று இரண்டாவது நாளாக நீடித்தது. போராட்டத்தில் ஈடுபட்ட கைதிகளில் மூவர், விஷ இலையை அரைத்து குடித்து தற்கொலைக்கு முயன்றனர். அவர்களை, சிறை காவலர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.இந்த தகவல் பரவியதால், கைதிகள் இடையே மேலும் பதற்றம் ஏற்பட்டது. இரண்டு கைதிகள், மொபைல் போன் டவரில் ஏறி, போராட்டம் நடத்தினர்.

அவர்களிடம், சிறை அதிகாரிகள் பேச்சு நடத்தினர்.'சிறையில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதால், அனைவரையும் ஜாமினில் விட வேண்டும். நீதிபதிகள் நேரில் வந்து விசாரணை நடத்த வேண்டும். அப்போது தான் கீழே இறங்குவோம்' என்றனர்.கைதிகளிடம் அதிகாரிகள் தொடர்ந்து பேச்சு நடத்தினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X