சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வருவாய் ஆய்வாளருக்கு கொரோனா ; கனிமவளத்துறை அலுவலகம் 'மூடல்'

Added : ஜூன் 26, 2020
Share
Advertisement

விழுப்புரம் : வருவாய் ஆய்வாளருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால், கனிமவளத்துறை அலுவலகம் மூடப்பட்டது.

விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள இரண்டாம் தளத்தில் புவியியல் மற்றும் சுரங்கத்துறை (கனிமவளம்) அலுவலகம் செயல்பட்டு வருகின்றது. இங்கு, பணிபுரியும் வருவாய் ஆய்வாளர் ஒருவருக்கு நேற்று முன்தினம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவர் விழுப்புரம் சுகாதார மனிதவள மேம்பாட்டு நிறுவனத்தில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். இதை தொடர்ந்து, அவருடன் பணிபுரிந்த அலுவலர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.மேலும், நகராட்சி துப்புரவு பணியாளர்கள், கனிமவளத்துறை அலுவலகத்தில் கிருமி நாசினி தெளித்தனர்.

இதன் பின், சுகாதாரத்துறை அதிகாரிகளின் அறிவுறுத்தலின்பேரில், கனிமவளத்துறை அலுவலகம் மூடப்பட்டது. இந்த அச்சத்தால் கனிமவளத்துறை அலுவலகம் அருகில் உள்ள சில அலுவலகங்களுக்கு மூடப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X