பொது செய்தி

தமிழ்நாடு

சாத்தான்குளம் தந்தை, மகன் உடல் அடக்கம் நீதித்துறை மீது நம்பிக்கை இருப்பதாக மகள் உருக்கம்

Added : ஜூன் 26, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

திருநெல்வேலி; போலீஸ் தாக்குதலில் பலியான தந்தை, மகன் உடல்களை நேற்று குடும்பத்தினர் பெற்று, அடக்கம் செய்தனர். அப்போது, ''நீதித்துறை மீது நம்பிக்கை வைக்கிறோம்,'' என, ஜெயராஜ் மகள் பெர்சி உருக்கமாக தெரிவித்தார்.

துாத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தைச் சேர்ந்தவர் ஜெயராஜ், 60; மகன் பென்னிக்ஸ், 31. தந்தை மரக்கடையும், மகன் அலைபேசி கடையும் நடத்தினர்.ஜூன், 19 இரவில் ரோந்து போலீசார், ஊரடங்கை காரணம் காட்டி, கடைகளை அடைக்க கூறினர். இதில், வாக்குவாதம் ஏற்பட்டது. போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து செல்லப்பட்டு, இருவரும் கடுமையாக தாக்கப்பட்டனர்.ஜூன், 20ல் கோவில்பட்டி கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்.

ஜூன், 22 இரவில் பென்னிக்ஸ், மறுநாள் காலையில் ஜெயராஜ் இறந்தனர்.இருவரின் உடல்கள், திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டன. உடல்களை வாங்க, குடும்பத்தினர் மறுத்தனர்.கோவில்பட்டி மாஜிஸ்திரேட் பாரதிதாசன் நேற்றும் ஜெயராஜ் குடும்பத்தினரிடம் விசாரணை மேற்கொண்டார். அதன்பின், இருவரது உடல்களையும் குடும்பத்தினர் வாங்க முன்வந்தனர்.ஜெயராஜின் மூத்த மகள் பெர்சி கூறியதாவது:எங்கள் தந்தை, தம்பி கடுமையாக தாக்கப்பட்டுள்ளனர். தாய் செல்வராணியின் உடல்நலம் தற்போது பாதிக்கப்பட்டு உள்ளது.தாக்கிய போலீசார் மீது கொலை வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை. நீதித்துறையினர் விசாரணை மேற்கொள்வதால் தக்க நடவடிக்கை எடுப்பர் என்ற நம்பிக்கையுடன் உடல்களை பெற்று செல்கிறோம்.இவ்வாறு, அவர் கூறினார்.

இருவரது உடல்களும், ஆம்புலன்ஸ் மூலம் சாத்தான்குளம் கொண்டு செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. அரசு நிவாரணமாக, குடும்பத்தினரிடம், 20 லட்சம் ரூபாய்க்கான காசோலை வழங்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
s.rajagopalan - chennai ,இந்தியா
26-ஜூன்-202014:02:00 IST Report Abuse
s.rajagopalan டென்ஷனில் இருக்கும் போலீசார், சட்டங்களை மீறுவோர் மேலும் அடாவடியாக செயல்படும்போது, நிதானத்தை இழந்து விடுகின்றனர். இந்த குற்றத்திற்கு 'மரண ' தண்டனை கண்டனத்துக்குரியது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X