சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மகள் இறந்த துக்கம்: தாய் தற்கொலை

Added : ஜூன் 26, 2020
Share
Advertisement

நெல்லிக்குப்பம் : மகள் இறந்த துக்கத்தில் தாய் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

நெல்லிக்குப்பம் அடுத்த மேல்பட்டாம்பாக்கம், பி.என்.பாளையத்தை சேர்ந்தவர் திருமலை மனைவி விஜயா, 44. இவர்களது மகள் சந்தியாவை அதே பகுதியை சேர்ந்த அசோக்குமார் என்பவருக்கு திருமணம் செய்து வைத்தனர்.இவர்களுக்கு பிறந்த ஆண் குழந்தைக்கு இருதயத்துக்கு செல்லும் ரத்த குழாயில் அடைப்பு ஏற்பட்டதால், பத்து மாதத்துக்கு முன் இறந்தது.இதனால் மன வேதனையில் இருந்த சந்தியா, நான்கு மாதங்களுக்கு முன் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

பேரக்குழந்தை, மகள் இறந்த துக்கத்தில் இருந்த விஜயா, நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் இறந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.புகாரின்பேரில் நெல்லிக்குப்பம் இன்ஸ்பெக்டர் வீரமணி வழக்கு பதிந்து விசாரித்து வருகிறார். விஜயா இறப்பிற்கான காரணம் பற்றி அவரது குடும்பத்தினரிடம் டி.எஸ்.பி., பாபு பிரசாந்த் விசாரித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X