சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தடுப்பணைக்கு கையகப்படுத்திய நிலம் இழப்பீடு கோரி விவசாயிகள் மறியல்

Added : ஜூன் 26, 2020
Share
Advertisement

காட்டுமன்னார்கோவில் : மா.ஆதனுாரில் தடுப்பணை கட்டும் பணிக்காக கையகப்படுத்திய நிலத்திற்கு இழப்பீடு வழங்க கோரி விவசாயிகள் மறியலில் ஈடுப்பட்டனர்.

கடலுார் மாவட்டம் ஆதனுார், நாகை மாவட்டம் குமாரமங்கலம் இடையே கொள்ளிடம் ஆற்றில் 400 கோடி ரூபாய் மதிப்பில் தடுப்பணை கட்டுமானப்பணி கடந்த 2019ல் துவங்கியது. இதற்காக ம.ஆதனுார், கீழபுளியம்பட்டு, எய்யலுார், ஆச்சாள்புரம், சிறுகாட்டூர் ஆகிய கிராமங்களில் கொள்ளிடம் கரையில் உள்ள 118.56 ஏக்கர் புஞ்சை நிலம் கையகப்படுத்தப்பட்டது. இந்த நில உரிமையாளர்களுக்கு இழப்பீடு் தொகை வழங்கப்படவில்லை.பாதிக்கப்பட்ட விவசாயிகள் பல முறை மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை.

இதனால், நிலம் கொடுத்த விவசாயிகள் இழப்பீடு கோரி மா.ஆதனுார் தடுப்பணை கட்டுமான இடத்தில் மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். விவசாயி நாகராஜன் தலைமையில் வெங்கட்ராமன் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.தகவல் அறிந்த பொதுப்பணித் துறை செயற்பொறியாளர் கண்ணன், உதவி இன்ஜினியர் ராஜாராம், எஸ்.ஐ., தனசேகரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். போராட்டத்தில் ஈடுப்பட்ட விவசாயிகள் திடீரென ஆற்றில் இறங்கி, கட்டுமானப் பணிகளை தடுக்க முயன்றனர். அவர்களிடம் அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தி, சமாதானம் செய்ததை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X