சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பங்க் கடைக்காரரை தாக்கியகணவன், மனைவி கைது

Added : ஜூன் 26, 2020
Share
Advertisement

விழுப்புரம் : தகராறில் பங்க் கடை உரிமையாளரை திட்டி தாக்கிய கணவன், மனைவி உட்பட மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.

கிளியனுார் அடுத்த ஆதனப்பட்டை சேர்ந்தவர் ரவிச்சந்திரன், 37; பங்க் கடை வைத்துள்ளார். இவரது உறவினர் அதே பகுதியை சேர்ந்த லோகநாதன், 48; என்பவரின் ஆடுகள், பங்க் கடையில் உள்ள காய்கறிகளை அடிக்கடி மேய்ந்து வந்தது.இதேபோன்று, கடந்த 22ம் தேதி காய்கறிகளை ஆடு மேய்ந்ததை, ரவிச்சந்திரன் கேட்டுள்ளார். இதனால், ஏற்பட்ட பிரச்னையில் லோகநாதன், அவரது மனைவி புட்லாய், 42; பாஸ்கரன் மனைவி சத்யா, 35; ஆகியோர் சேர்ந்து ரவிச்சந்திரனை திட்டி தாக்கினர்.இது குறித்த புகாரின்பேரில், கிளியனுார் போலீசார் வழக்கு பதிந்து லோகநாதன் உட்பட மூன்றுபேரை கைது செய்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X