பொது செய்தி

தமிழ்நாடு

வீராணம் ஏரிக்கு நீர் வரத்து அதிகரிப்பு

Added : ஜூன் 26, 2020
Share
Advertisement

காட்டுமன்னார்கோவில் : கீழணையில் இருந்து வடவாற்றில் 320 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுவதால், வீராணம் ஏரிக்கு வரும் தண்ணீர் படிப்படியாக அதிகரித்து வருகிறது.

கீழணையின் தண்ணீர் மட்டம் நான்கு நாட்களில் 3 அடியாக உயர்ந்துள்ளது. கல்லணையில் இருந்து கொள்ளிடத்தில் 816 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. அணைக்கரை கீழணைக்கு 500 கன அடியாக வரத்து உள்ளது.இதில் வீராணம் ஏரிக்கு வடவாற்றில் 312 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதனால் வடவாற்றில் கடந்த நான்கு நாட்களில் படிப்படியாக தண்ணீர் அளவு உயர்ந்துள்ளது.வடவாறு தண்ணீர் பாசன வாய்க்கால் மதகுகளில் ஏற்பட்டுள்ள கசிவு காரணமாக வீராணம் ஏரிக்கு 209 கன அடி வரத்தாக உள்ளது.

கீழணையில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால், வீராணம் ஏரியிலும் தண்ணீர் மட்டம் உயரத் துவங்கியுள்ளது. ஏரியின் நீர் மட்டம் அரை அடி உயர்ந்துள்ளது. வீராணம் ஏரியில் நேற்றைய தண்ணீர் மட்டம் 40.46 அடியாக (134 மில்லியன் கன அடி) இருப்பு இருந்தது. சென்னை குடிநீருக்கு 48 கன அடி தண்ணீர் எடுக்கப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X