அரசியல் செய்தி

தமிழ்நாடு

'கூட்டுறவு வங்கி அவசர சட்டம் ஜனநாயகத்திற்கு விரோதமானது'

Added : ஜூன் 26, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

சென்னை; 'கூட்டுறவு வங்கிகளை, ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் கொண்டு வரும் அவசர சட்டத்தைப் பிறப்பிக்க, மத்திய அமைச்சரவை முடிவு எடுத்திருப்பது, ஜனநாயகத்திற்கு விரோதமானது' என, தி.மு.க., தலைவர், ஸ்டாலின் கூறியுள்ளார்.

அவரது அறிக்கை:மத்திய பட்ஜெட்டில் அறிவித்த, பொதுவான ஒரு அறிவிப்பை காரணம் காட்டி, மாநிலங்களில் உள்ள, 1,540 கூட்டுறவு வங்கிகளை, ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டில் கொண்டு வர, அவசர சட்டம் பிறப்பிக்கப்படும் என, மத்திய அமைச்சர், பிரகாஷ் ஜாவடேகர் அறிவித்திருப்பது, கடும் கண்டனத்திற்குரியது.கொரோனா தொற்று சூழலின் நெருக்கடியை பயன்படுத்தி, மக்கள் விரோத அவசர சட்டத்தைப் பிறப்பிக்க, மத்திய அமைச்சரவை முடிவு எடுத்திருப்பது, ஜனநாயகத்திற்கே விரோதமானது.

எதிர்காலத்தில் விவசாயிகளுக்கு, மாநில அரசுகள், விவசாயக் கடன் வழங்குவதற்கு தடையாக இருக்கும், இந்த அவசர சட்டம் பிறப்பிக்கும் முயற்சியை நிறுத்தும்படி, முதல்வர் இ.பி.எஸ்., தேவையான அரசியல் அழுத்தத்தை, மத்திய அரசுக்கு கொடுக்க வேண்டும்.இவ்வாறு, ஸ்டாலின் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sivaraj KR - Erode,இந்தியா
26-ஜூன்-202009:34:49 IST Report Abuse
Sivaraj KR நிதி மோசடி முறைகேடுகளை வெளிக்கொண்டுவர இது பெரிதும் உதவும்... தகவல் உரிமை சட்டத்திற்கு துணைபுரியும் .. நல்லதொரு நடவடிக்கை..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X