பொது செய்தி

தமிழ்நாடு

1,463 ஆசிரியர்களுக்கு பணி நீட்டிப்பு உத்தரவு

Added : ஜூன் 26, 2020
Share
Advertisement

சென்னை; அரசு பள்ளிகளில் பணியாற்றும், 1,463 கணினி ஆசிரியர்களுக்கு, மூன்று ஆண்டுகளுக்கு பணி நீட்டிப்பு வழங்கி, பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில், கணினி பயிற்றுனர் இரண்டாம் நிலையில், கணினி ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். இந்த பணியில், 2000ம் ஆண்டில், 1,880 பேர் நியமிக்கப்பட்டனர்.அவர்களில், பணி நிரவல் மற்றும் பல்வேறு காரணங்களால், காலியான இடங்களை தவிர்த்து, 1,463 இடங்களுக்கு பணி நீட்டிப்பு செய்து, பள்ளி கல்வி செயலர், தீரஜ்குமார் அரசாணை பிறப்பித்துள்ளார். இந்த உத்தரவு, கணினி பயிற்றுனர் பணியிடங்களுக்கு, 2022 டிசம்பர் வரை செல்லுபடியாகும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X