பொது செய்தி

தமிழ்நாடு

இணையதளம், இ- சேவை மையம் மூலம் மனு

Added : ஜூன் 26, 2020
Share
Advertisement

கள்ளக்குறிச்சி : கொரோனா ஊரடங்கால் ஜமாபந்தி நிகழ்ச்சிக்கான மனுக்களை இணையதளம் மற்றும் இ - சேவை மையங்கள் மூலம் மனுக்கள் அளித்து பயனடையுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

கலெக்டர் கிரண் குராலா செய்திகுறிப்பு:கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டங்களிலும் ஜமாபந்தி நிகழ்ச்சி வரும் 29ம் தேதி துவங்குகிறது. தற்போது, கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளதால் பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை வரும் 29ம் தேதி முதல் ஜூலை 15ம் தேதி வரை இணையதளம் மற்றும் இ - சேவை மையங்கள் மூலம் மட்டுமே அனுப்ப வேண்டும்.கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையை முன்னிட்டு நேரடியாக மனுக்கள் பெறப்படுவது தவிர்க்கப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை அளிக்க தாலுகா அலுவலகத்திற்கு நேரில் வரவேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

பொதுமக்கள் இணையதள முகவரி மற்றும் அருகில் உள்ள இ - சேவை மையங்கள் மூலம் மனுக்களை அளித்து பயன் பெறலாம்.அதன்படி கள்ளக்குறிச்சி தாலுகா அலுவலக த்திற்கு kaltaluk@gmail.com, சங்கராபுரம் அலுவலகம் tahsildarspm@gmail.com, சின்னசேலம் அலுவலகம் chinnasalemtk@yahoo.in, கல்வராயன்மலை அலுவலகம் tahsildarkhills@gmail.com, திருக்கோவிலுார் அலுவலகம் tirtaluk.tnvpm@nic.com மற்றும் உளுந்துார்பேட்டை தாலுகா அலுவலகம் ulutaluk2012@gmail.com ஆகிய இணையதள முகவரியில் மட்டுமே மனு அனுப்பி பயனடைய கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X