பொது செய்தி

தமிழ்நாடு

துவங்கியது! கள்ளக்குறிச்சியில் 3 மெகா திட்டப் பணிகள்...சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டு ஜரூர்

Added : ஜூன் 26, 2020
Share
Advertisement

கள்ளக்குறிச்சி : சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டு கள்ளக்குறிச்சி மாவட்ட தலைநகரில் கலெக்டர் அலுவலக கட்டடம், அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை, ரிங்ரோடு ஆகிய 3 மெகா திட்டங்களுக்கான முதல் கட்ட பணிகள் துவங்கி வேகம் எடுத்துள்ளது.

விழுப்புரம் மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டு கள்ளக்குறிச்சி புதிய மாவட்டத்தை கடந்தாண்டு நவம்பர் 26ம் தேதி முதல்வர் பழனிசாமி துவக்கி வைத்தார். அப்போது, விழா மேடையில், புதிதாக துவங்கப்பட்டுள்ள கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை மற்றும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் 'ரிங் ரோடு' அமைக்கப்படும் எனவும் அறிவித்தார்.மாவட்டம் துவங்கியதையடுத்து, கலெக்டர் கிரண் குராலா, எஸ்.பி., ஜெயச்சந்திரன், டி.ஆர்.ஓ., சங்கீதா உள்ளிட்ட மாவட்ட அதிகாரிகள் பொறுப்பேற்றனர்.

கள்ளக்குறிச்சி - கச்சிராயபாளையம் சாலையில் உள்ள மார்க்கெட் கமிட்டி வளாகத்தில் கலெக்டர் அலுவலகம், உலகங்காத்தானில் உள்ள தனியார் கல்வியியல் கல்லுாரி வளாகத்தில் எஸ்.பி., அலுவலகம், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் டி.ஆர்.ஓ., அலுவலகம் என முக்கிய மாவட்ட அலுவலகங்கள் தற்காலிகமாக துவங்கப்பட்டு இயங்கி வருகிறது. இந்நிலையில் கள்ளக்குறிச்சியில் நிரந்தர கலெக்டர் அலுவலகத்திற்கு வீரசோழபுரம் கோவில் நிலம் மற்றும் அங்குள்ள புறம்போக்கு இடம் உள்ளிட்ட பகுதிகள் தேர்வு செய்யப்பட்டு, முதல் கட்ட பணியாக, மண் மாதிரி ஆய்வு செய்யும் பணியை பொதுப்பணித்துறை அலுவலர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

சிறுவங்கூர் கிராமத்தில் அரசு கலைக்கல்லுாரி அருகே மருத்துவக்கல்லுாரி அமைய உள்ள இடத்தில் முதல் கட்டமாக அளவீடு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. 20 ஏக்கர் பரப்பளவு கொண்ட அரசுக்கு சொந்தமான இடத்தில் மருத்துவக்கல்லுாரி, மருத்துவமனை, மாணவர் விடுதிகள், ஆய்வகங்கள், கருத்தரங்கு கூடங்கள் உள்ளிட்டவை இடம்பெற உள்ளன. கள்ளக்குறிச்சி நகரில் பெருகி வரும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வாக, முதல்வர் அறிவித்த 'ரிங் ரோடு' திட்ட பணிகளும் முதல் கட்ட அளவில் துவங்கியுள்ளது. இதற்காக மாடூர் டோல்கேட் பகுதியிலிருந்து பெருவங்கூர், சிறுவங்கூர், ரோடு மாமாந்துார், சோமண்டார்குடி, காரனுார், குடிகாடு, காரனுார், தச்சூர் பகுதிகளை உள்ளடங்கிய நிலத்தில் சுற்றுவழி பாதை உருவாக்கிடும் வகையில் அளவீடு செய்யும் பணியை நெடுஞ்சாலைத்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

முதல்வர் பதவியேற்று 3 ஆண்டுகள் நிறைவு பெறும் நிலையில், அடுத்தாண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலைக் கருத்தில் கொண்டு அ.தி.மு.க., அரசின் சாதனை திட்டங்களாக கூறிக்கொள்ளும் வகையில் 500 கோடி ரூபாய்க்கும் மேலான மதிப்பீட்டில் புதிய மாவட்டத்தில் 3 மெகா திட்டப் பணிகளும் வேகமாக துவங்கப்பட்டு நடைபெறுகிறது.இந்த மெகா திட்டங்களால் கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் தலைநகரான, நகர பகுதி துரிதமாக வளர்ச்சி பெறும் என்பதில் ஐயமில்லை.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X