இந்தியா

தாயை பராமரிக்காத மகனிடமிருந்து சொத்துக்களை மீட்டு ஒப்படைப்பு

Added : ஜூன் 26, 2020
Share
Advertisement

காரைக்கால் : காரைக்காலில், தாயை ஏமாற்றி சொத்துக்களை எழுதி வாங்கிக் கொண்டு, பராமரிக்காமல் தவிக்க விட்ட மகனிடமிருந்து, அச்சொத்துக்களை மீட்டு மூதாட்டியிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதுகுறித்து, துணை மாவட்ட ஆட்சியர் ஆதர்ஷ் வெளியிட்ட செய்திக்குறிப்பு:காரைக்கால் அண்ணா நகர் மூன்றாவது குறுக்குத் தெருவில் வசிக்கும் வயது முதிர்ந்த பெண்மணி ஒருவர், கடந்த 21.08.2019 அன்று தனது மகன் மீது ஒரு புகார் மனுவை, துணை மாவட்ட ஆட்சியர் ஆதர்ஷிடம் அளித்தார்.அதில், குடும்ப பொது சொத்தில் தனது பாகத்தை பிரித்து, எனது மகன் என்னை ஏமாற்றி, முறைகேடாக விடுதலை பத்திரம் எழுதி பெற்றுக் கொண்டார். என்னை பராமரிக்காமல் தொல்லை கொடுக்கிறார். இதனால் மன உளைச்சல் ஏற்பட்டு, ஆதரவற்று நிற்கிறேன். முறைகேடாக எழுதிப்பெற்ற எனது சொத்தை மகனிடமிருந்து மீட்டுத்தர வேண்டும் என கோரி இருந்தார்.

இந்த மனு, காரைக்கால் பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு மற்றும் நலத்தீர்ப்பாயத்தின் முன் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. சம்பந்தப்பட்ட மூதாட்டி அவரது மகன், மகள் மற்றும் அவர் வசிக்கும் இடத்தில் கள விசாரணை நடத்தி, புகார் உண்மை என உறுதிபடுத்தப் பட்டது.இதில், கடந்த 8ம் தேதி, துணை மாவட்ட ஆட்சியர் மற்றும் தீர்ப்பாயத்தின் தலைமை அதிகாரி ஆதர்ஷ் முன்னிலையில் தீர்ப்பு வழங்கப்பட்டது. மூதாட்டியின் மகன் முறைகேடாக எழுதிப்பெற்ற விடுதலை பத்திரம் ரத்து செய்யப்பட்டு, மூதாட்டியின் சொத்து அவருக்கு மீட்டு தரப்பட்டது.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X