ஹாலோகிராம் ஸ்டிக்கர் மோசடி மதுபான ஆலை மீது வழக்கு பதிவு| Dinamalar

இந்தியா

ஹாலோகிராம் ஸ்டிக்கர் மோசடி மதுபான ஆலை மீது வழக்கு பதிவு

Added : ஜூன் 26, 2020
Share

காட்டேரிக்குப்பம் : மது பாட்டில்களில் ஹாலோகிராம் ஸ்டிக்கர் ஒட்டாமல் மோசடியில் ஈடுபட்ட, ரவிக்குமார் மதுபான ஆலை மீது, 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கலால் துறை துணை ஆணையர் சஸ்வத் சவுரப் தலைமையிலான அதிகாரிகள், கடந்த 16ம் தேதி, காட்டேரிக்குப்பத்தில் உள்ள ரவிக்குமார் மதுபான ஆலையில் திடீர் சோதனை நடத்தினர். விற்பனைக்கு அனுப்ப தயாராக இருந்த மது பாட்டில்கள் அடங்கிய பெட்டிகளை ஆய்வு செய்தனர்.அதில், 96 குவாட்டர் பாட்டில்களில் 24ல் மட்டும் அரசின் ஹாலோகிராம் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு, மற்றவற்றில் ஸ்டிக்கர் ஒட்டப்படாமல் இருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து, ஆலை, குடோனுக்கு சீல் வைக்கப்பட்டது. கலால் துறையின் பறக்கும் படை தாசில்தார் ரவிச்சந்திரன், அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படும் வகையில் ரவிக்குமார் மதுபான ஆலை செயல்பட்டதாக, நேற்று முன்தினம் காட்டேரிக்குப்பம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், மேற்கு எஸ்.பி., ரங்கநாதன் மேற்பார்வையில், சப் இன்ஸ்பெக்டர் முருகானந்தம், மோசடி, அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்துதல் உள்ளிட்ட 8 பிரிவுகளில் ஆலை நிர்வாகத்தின் மீது வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகிறார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X