இந்தியா

வேதபுரீஸ்வரர் கோவில் இடத்தில் யானையை பராமரிக்க கோரிக்கை

Added : ஜூன் 26, 2020
Share
Advertisement

புதுச்சேரி : பாதுகாப்பு கொண்ட வேதபுரீஸ்வரர் கோவில் இடத்தில், மணக்குள விநாயகர் கோவில் யானையை பராமரிக்க வேண்டும் என கவர்னருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து புதுச்சேரி திருக்கோவில்கள் பாதுகாப்பு கமிட்டி செயலாளர் தட்சிணாமூர்த்தி, கவர்னர் கிரண்பேடிக்கு அனுப்பியுள்ள மனு:புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவில் யானை லட்சுமியை ,கோவில் வழிபாட்டுக்கு எதிரானவர்கள், சுயலாபத்திற்காக அங்கிருந்து அகற்ற பல ஆண்டுகளாக முயற்சித்து வருகின்றனர். யானையை பற்றி பொய்யான புகார்களை அரசுக்கு அனுப்பி வருகின்றனர்.இதுபோன்ற புகாரை சரியாக விசாரிக்காமல், உடல் நலம் நன்றாக உள்ள யானையை கடந்த 3ம் தேதி காமராஜர் வேளாண்மை அறிவியல் நிலைய பண்ணைக்கு 10 கி.மீ. தொலைவிற்கு நடத்தி அழைத்து சென்றனர்.

யானை உடல்நிலை நன்றாக உள்ளது என்பதற்கு இதுவே சாட்சி.இந்த பண்ணையில், அதிக விஷம் உள்ள பாம்புகள், பூச்சிகளுக்கு மத்தியில் யானை உள்ளது.நல்ல ஆரோக்கியமான நிலையில் இருந்த யானையை பண்ணைக்கு அழைத்து சென்றதன் மூலம் அதன் உடல்நிலை, மனநிலை பாதிப்படைந்துள்ளது. எனவே, வசதிகளும் பாதுகாப்பும் கொண்ட வேதபுரீஸ்வரர் கோவில் இடத்திற்கு யானையை மாற்ற வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X