அரசு மருத்துவமனையில் அடையாளம் தெரியாத முதியவர் சாவு | Dinamalar

இந்தியா

அரசு மருத்துவமனையில் அடையாளம் தெரியாத முதியவர் சாவு

Added : ஜூன் 26, 2020
Share

புதுச்சேரி : அரசு பொது மருத்துவமனையில் உயிரிழந்த அடையாளம் தெரியாத முதியவர் பற்றி தகவல் கோரப்பட்டுள்ளது.

இந்திராகாந்தி அரசு பொது மருத்துவமனை ஆண்கள் தீவிர சிகிச்சை பிரிவில், 60 வயது முதியவர் கடந்த 19ம் தேதி மயங்கிய நிலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது உடல் மருத்துவமனை பிணவறையில் உள்ளது.சிகிச்சையின் போது தனது பெயர் ராமலிங்கம் என்பதை மட்டுமே கூறியுள்ளார். விலாசம், மற்ற விபரங்கள் தெரியவில்லை. இவரைப் பற்றி தகவல் தெரிந்தவர்கள் மருத்துவமனை உள்ளிருப்பு மருத்துவ அதிகாரி ரவி (94434-59348), மக்கள் தொடர்பு அதிகாரி ஆத்மநாதன் (94880-74492) ஆகியோரை தொடர்பு கொள்ளலாம்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X