அனைத்து மீனவர்களுக்கும் நிவாரணம் கோரி அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் போராட்டம் | Dinamalar

இந்தியா

அனைத்து மீனவர்களுக்கும் நிவாரணம் கோரி அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் போராட்டம்

Added : ஜூன் 26, 2020
Share

புதுச்சேரி : மீன்பிடி தடைக்கால நிவாரணத்தை அனைத்து மீனவர்களுக்கும் வழங்க வலியுறுத்தி, கவர்னர் மாளிகை முன்பு அ.தி.மு.க.,எம்.எல்.ஏ.,க்கள் கருப்பு கொடியுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுச்சேரியில் ஓய்வூதியம் பெறும் மீனவர்களுக்கு, மீன்பிடி தடைக்கால நிவாரணம் வழங்க, கவர்னர் கிரண்பேடி ஒப்புதல் தரவில்லை. இதற்கு மீனவ கிராமங்கள் அடங்கிய தொகுதி எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும், இது தொடர்பாக கவர்னரை நேற்று சந்திக்க நேரம் ஒதுக்கும்படி கடிதம் அனுப்பி இருந்தனர்.இந்நிலையில், மீனவர்களுக்கு எதிராக செயல்படும் ஆளும் காங்., அரசையும், தடைக்கால நிவாரண உதவி பெற புதுப்புது சட்டங்களை புகுத்தும் கவர்னரை கண்டித்து, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் அன்பழகன், வையாபுரிமணிகண்டன், பாஸ்கர் ஆகியோர் நேற்று கவர்னர் மாளிகை அருகே கருப்பு கொடி மற்றும் பதாகைகள் ஏந்தி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
.போராட்டத்தில் ஈடுபட்ட எம்.எல்.ஏ.க்களிடம், சீனியர் எஸ்.பி., பிரதிக் ஷா, எஸ்.பி., மாறன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, மீன்பிடி தடைக்கால நிவாரணம் வழங்குவது தொடர்பாக, கவர்னருடன் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யுமாறு அன்பழகன் எம்.எல்.ஏ., கேட்டுக் கொண்டார். சீனியர் எஸ்.பி., கவர்னர் மாளிகை அதிகாரிகளுடன் தொடர்பு கொண்ட போது, 'ஒரு சில தினங்களில் இது தொடர்பாக அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்களை அழைத்து கவர்னர் பேசுவார்' என தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து, எம்.எல்.ஏ.க்கள் போராட்டத்தை கைவிட்டனர். மீனவர் போராட்டத்தில் அ.தி.மு.க., பங்கேற்கும்அன்பழகன் எம்.எல்.ஏ., கூறும்போது 'எங்களின் போராட்டத்திற்கு பிறகாவது மீனவர்களுக்கு மீன்பிடி தடைக்கால நிவாரண தொகையை உடனடியாக அரசு வழங்க வேண்டும். இல்லையென்றால் 26ம் தேதி (இன்று) புதுச்சேரியில் உள்ள 18 மீனவ கிராம மக்களும் பங்கேற்று நடத்தும் கருப்பு கொடி போராட்டத்திற்கு அ.தி.மு.க., ஆதரவு அளித்து பங்கேற்கும்' என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X