இந்தியா

காரைக்காலில் ஒரே நாளில் குழந்தை உட்பட 10 பேருக்கு தொற்று

Added : ஜூன் 26, 2020
Share
Advertisement

காரைக்கால் : காரைக்காலில் ஒரே நாளில், குழந்தை உட்பட 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப் பட்டுள்ளனர்.

காரைக்கால் மாவட்டத்தில் வெளிநாடு மற்றும் வெளி மாநிலத்தில் இருந்து வரும் நபர்களால், கொரோனா வைரஸ் தொற்று பரவி வருகிறது. தொற்று பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.இந்நிலையில், கடந்த 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டவர்களில், 10 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று முன்தினம் உறுதியானது.

இதில் திருநள்ளாறு பண்டாரவாடை பகுதியை சேர்ந்த 64 வயது மூதாட்டி, லெமர் வீதியில் 28 வயது ஆண், 26 வயது பெண், பெருமாள் கோவில் வீதியில் 14 வயது சிறுவன் ஆகியோர் சென்னையிலிருந்து காரைக்கால் வந்தவர்கள் ஆவர்.காரைக்கால் புளியங்கொட்டை சாலை எம்.ஜி.ஜெ. நகரை சேர்ந்த 28 வயது பெண், மூன்று வயது குழந்தை, எம்.என்.ஜி. நகரை சேர்ந்த 33 வயது ஆண். 30வயது பெண், 4 வயது பெண் மற்றும் ஆண் ஆகிய இரு குழந்தைகளுக்கு தொற்று பாதிக்கப்பட்டுள்ளது.

ஒரே நாளில் ஒரு குழந்தை உள்ளிட்ட 10 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.தொற்று பாதிக்கப்பட்டவர்கள் வசித்த பகுதியில் உள்ளவர்கள் வெளியில் செல்லவும், பிறர் உள்ளே வரவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தொற்று பாதிக்கப்பட்ட பகுதிகளை கலெக்டர் அர்ஜுன் சர்மா, துணை மாவட்ட ஆட்சியர் ஆதர்ஷ் ஆகியோர் பார்வையிட்டனர்.தொற்று உள்ளவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறியும் பணியில் சுகாதாரத் துறை ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இதுவரை, காரைக்காலில் 24 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர்.சிகிச்சை பெற்றவர்களில் மூவர் குணமடைந்து வீடு திரும்பினர். 21 பேருக்குசிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X