சம்பவம் செய்தி

தமிழ்நாடு

முப்படை வீரர்கள் அணிவகுப்பு

Added : ஜூன் 26, 2020
Share
Advertisement

உளுந்துார்பேட்டை : ரஷ்யாவில் நடந்த முப்படை ராணுவ வீரர்கள் அணிவகுப்பில் உளுந்துார்பேட்டை அடுத்த பாதுாரைச் சேர்ந்த இந்தியன் ஏர்போர்ஸ் வீரர் பங்கேற்று பெருமை சேர்த்துள்ளார்.கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டை அடுத்த பாதுார் கிராமத்தைச் சேர்ந்தவர் வாசுதேவன். முன்னாள் ராணுவ வீரர். இவரது மனைவி சாந்தினி. முன்னாள் ஊராட்சி தலைவர். இவர்களின் இரண்டாவது மகன் யுவராஜ், 23; இவர், கடந்த 2017ம் ஆண்டு, கர்நாடகா மாநிலம், பெல்காம் பகுதியில் இந்தியன் ஏர்போர்ஸ் வீரராக பயிற்சி பெற்றார். இதையடுத்து, இந்தியன் ஏர்போர்ஸ் சாகசம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார். இவர், ரஷ்யா நாட்டில் நடந்த முப்படை வீரர்கள் அணிவகுப்பில் இந்தியா சார்பில் கலந்து கொண்டு, தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X