புதுச்சேரி வக்கீல்களின் உரிமையை பறிக்கும் உத்தரவை ரத்து செய்ய வேண்டும்| Dinamalar

இந்தியா

புதுச்சேரி வக்கீல்களின் உரிமையை பறிக்கும் உத்தரவை ரத்து செய்ய வேண்டும்

Added : ஜூன் 26, 2020
Share

புதுச்சேரி : புதுச்சேரி வக்கீல்களின் உரிமையை பறிக்கும் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து, இந்திய கம்யூ., மாநில செயலாளர் சலீம் வெளியிட்டுள்ள அறிக்கை:புதுச்சேரி கவர்னராக கிரண்பேடி பொறுப்பேற்ற பின், மாநில உரிமைகளை ஒவ்வொன்றாக பறித்து வருகிறார். இப்போது புதுச்சேரி வக்கீல்களின் உரிமையை பறித்துள்ளார். இது கண்டனத்திற்குரியது. புதுச்சேரி மண்ணின் உரிமைக்காக முதல் குரல் எழுந்தது, ஒரு வழக்கறிஞரால்தான் என்பது வரலாறு.புதுச்சேரி வக்கீல் சங்கம் நடத்தும் போராட்டம், மாநில உரிமைக்கான போராட்டமாக உள்ளது.

எனவே, புதுச்சேரி வக்கீல்களின் உரிமையை பறிக்கும் உத்தரவை ரத்து செய்ய வேண்டும். அவர்களின் போராட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு தெரிவித்துக் கொள்கிறது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X