இந்தியா

புதுச்சேரியில் கொரோனா

Added : ஜூன் 26, 2020
Share
Advertisement

புதுச்சேரி : புதுச்சேரியில், கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 505 ஆக உயர்ந்துள்ளது. புதுச்சேரியில் நேற்று முன்தினம் ஒரே நாளில் 42 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதியானது.

இதில், புதுச்சேரி பகுதியை சேர்ந்தவர்கள் 32 பேர்; காரைக்கால் பகுதியை சேர்ந்தவர்கள் 10 பேர்.புதுச்சேரி பகுதியில் புதிதாக தொற்று கண்டறியப்பட்டுள்ள 32 பேரில், முக கவசம் தயாரிக்கும் கம்பெனியுடன் தொடர்புடையவர்கள் 8 பேர். ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் 6 பேர்.புதுச்சேரியை சேர்ந்த ஒருவர் கொரோனா தொற்றுடன் சிதம்பரத்தில் சிகிச்சை பெற்று வருகிறார். மற்றவர்களுக்கு தொற்று யார் மூலமாக பரவியது என தெரியவில்லை. சமீப நாட்களில் அவர்கள் யார் யாரை சந்தித்தனர், எங்கெங்கே சென்றனர் என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

காரைக்கால் பகுதியில் பாதிக்கப்பட்டுள்ள 10 பேருக்கும், ஏற்கனவே சிகிச்சை பெற்று வருபவர்களிடம் இருந்து தொற்று பரவி உள்ளது. இவர்களில் சிலர் சென்னைக்கு சென்று வந்துள்ளனர்.நேற்று முன்தினம் நிலவரப்படி, புதுச்சேரியில் 284 பேரும், காரைக்காலில் 18 பேரும், மாகி, ஏனாம் பகுதிகளில் தலா ஒருவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இரண்டு பேர் கடலுார் மற்றும் சிதம்பரத்தில் சிகிச்சையில் உள்ளனர். புதுச்சேரியின் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 505 ஆக உயர்ந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X