இந்தியா

பெயிண்டரை பீர் பாட்டிலால் தாக்கிய இருவருக்கு வலை

Added : ஜூன் 26, 2020
Share
Advertisement

புதுச்சேரி : முன் விரோதத்தில் பெயிண்டரை பீர் பாட்டிலால் தாக்கிய இரண்டு பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

புதுச்சேரி, உப்பளம் நேத்தாஜி நகர் வீரன் கோவில் தெருவை சேர்ந்தவர் செல்வராஜ் மகன் ஜேக்கப்,25; பெயிண்டர். இவருக்கும், கண் டாக்டர் தோட்டத்தை சேர்ந்த மதன், 25, என்பவருக்கும் கடந்த சில நாட்களுக்கு முன் தகராறு ஏற்பட்டு தாக்கிக் கொண்டனர்.கடந்த 21ம் தேதி மாலை 5.00 மணியளவில் ஜேக்கப் உப்பளம் துறைமுகத்தில் இருந்தார். அப்போது மதன், வாணரப் பேட்டையை சேர்ந்த குமார்,24, என்பவருடன் அங்கு வந்தார். முன் விரோதம் காரணமாக ஆத்திரமடைந்த மதன், திடீரென பீர் பாட்டிலால் ஜேக்கப்பை தாக்கினார். குமாரும் கைகளால் தாக்கினார்.இதில் பலத்த காயமடைந்த ஜேக்கப் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, ஒதியன்சாலை போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து, மதன், குமாரை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X