இந்தியா

ரவுடி ரமேஷ் கொலை வழக்கில் மர்டர் மணிகண்டனிடம் விசாரணை

Added : ஜூன் 26, 2020
Share
Advertisement

புதுச்சேரி : ரவுடி கொட்டா ரமேஷ் கொலை வழக்கில், மர்டர் மணிகண்டன், மடுவுபேட் சுந்தர் ஆகியோரை காவலில் எடுத்து கோட்டக்குப்பம் போலீசார் விசாரணை நடத்தினர்.

புதுச்சேரி, பூமியான்பேட்டையை சேர்ந்தவர் கொட்டா ரமேஷ்,51. பிரபல ரவுடி. இவர் கடந்த 2ம்தேதி புதுச்சேரி அடுத்த தமிழக பகுதியான சின்ன கோட்டக்குப்பத்தில் வெடிகுண்டு வீசி கொலை செய்யப்பட்டார். கோட்டக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து, மதன், பத்மநாபன் உள்பட 6 பேரை கைது செய்தனர்.விசாரணையில், அரியாங்குப்பத்தை சேர்ந்த ஜிம் பாண்டியன் கொலைக்கு பழிக்கு பழியாக, ரமேஷ் கொலை செய்யப்பட்டதும், காலாப்பட்டு சிறையில் உள்ள மர்டர் மணிகண்டன், மவுடுபேட் சுந்தர் ஆகியோர் இதன் பின்னணியில் இருப்பது தெரிய வந்தது. அவர்கள் மீதும் போலீசார் வழக்கு பதிந்தனர்.

நேற்று முன்தினம் வானுார் கோர்ட்டில் போலீசார் அனுமதி பெற்று, மர்டர் மணிகண்டன், மடுவுபேட் சுந்தர் ஆகியோரை காவலில் எடுத்து, விசாரித்தனர்.அதில், தங்களுக்கும், எதிரியான ரவுடி அஸ்வினுக்கும் ஆதரவாக செயல்பட்டதால் கூட்டாளிகளை ஏவி ரமேஷை கொலை செய்ததாக கூறி உள்ளனர். விசாரணைக்கு பிறகு இருவரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X