இந்தியா

மீன்பிடி தடைக்கால நிவாரணம்

Added : ஜூன் 26, 2020
Share
Advertisement

இந்நிலையில், மீன்வளத் துறை செயலர் பூர்வா கார்க் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: இயற்கை பேரிடர் திட்டத்தின்படி, மீன்பிடி தடைக்காலத்தில் புதுச்சேரி மீனவர்களுக்கு வழங்கப்படும் நிவாரண உதவி திட்டத்தில் திருத்தத்தை புதுச்சேரி அரசு நேற்று செய்துள்ளது. இதன்படி, 'மீனவர் அல்லது குடும்ப உறுப்பினர்கள் ஓய்வூதியம் பெற்றாலும், இனி மீன்பிடி தடைக்கால நிவாரண உதவி பெறலாம்; மறுக்கப்படாது' என திருத்தம் செய்யப்பட்டு உள்ளது.

இந்த திருத்தம், மீனவர்களின் வாழ்வாதாரம், வருமானத்தை பாதிக்காது. ஆனால் இந்த நிதியுதவி நேரடியாக வங்கி கணக்கில் மட்டுமே செலுத்தப்படும். அடுத்த ஆண்டு மீன்பிடி தடைக்கால நிவாரணம் பெறுவதற்கு முன்பாக, பயனாளிகளின் பட்டியல் கணினிமயமாக்கப் பட்டு, நிர்வகிக்கப்பட வேண்டும். அத்துடன், துறையானது ஓய்வூதிய திட்ட விதிமுறைகளை ஆராய்ந்து பின்பற்ற வேண்டும். அதற்கான திருத்தத்தை கொண்டு வரவேண்டும். மீன்பிடி தடைக்கால நிவாரணம் வழங்க கவர்னர் ஒப்புதல் அளித்ததன் மூலம், மீன்வளத் துறைக்கு 12 கோடி ரூபாய் செலவாகும்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X