இந்தியா

மலட்டாறில் மணல் திருட்டு 5 பைக்குகள் பறிமுதல்

Added : ஜூன் 26, 2020
Share
Advertisement

புதுச்சேரி : பண்டசோழநல்லுாரில், மலட்டாறில் மணல் திருட பயன்படுத்திய ஐந்து பைக்குகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

நெட்டப்பாக்கம் அடுத்த பண்டசோழநல்லுார் மலட்டாறில் மணல் திருடி இரு சக்கர வாகனங்களில் ஏற்றிச் செல்வதாக, நேற்று முன்தினம் இரவு நெட்டப்பாக்கம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து, சப் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் தலைமையிலான போலீசார் அப்பகுதிக்கு விரைந்து சென்றனர்.அப்போது, மலட்டாறில் மணல் திருடி, ஐந்து மோட்டார் சைக்கிள்களில் ஏற்றிக் கொண்டிருந்தவர்கள், போலீசாரை கண்டவுடன் தப்பி ஓடிவிட்டனர். இதனையடுத்து, ஐந்து பைக்குகளையும் போலீசார் பறிமுதல் செய்து, இதுதொடர்பாக வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X