இந்தியா

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வாழ்க்கை கல்வி எனும் நிகழ்ச்சி

Added : ஜூன் 26, 2020
Share
Advertisement

புதுச்சேரி : லாஸ்பேட்டை கோலக்கார ரங்கசாமி நாயக்கர் அரசு நடுநிலைப் பள்ளியில், 'வாட்ஸ்ஆப்' வாயிலாக மாணவர்களுக்கு வாழ்க்கை கல்வி எனும் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.கொரோனா பரவல் காரணமாக கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன.
இந்நிலையில், லாஸ்பேட்டை கோலக்கார ரங்கசாமி நாயக்கர் அரசு நடுநிலைப் பள்ளியில், 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு, வாழ்க்கை கல்வி எனும் வாழ்வியல் சார்ந்த பயிற்சி, சமூக ஊடகம் மூலம் நடத்தப்பட்டு வருகிறது . இந்நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு ஒவ்வொரு நாளும் ஒரு செயல்பாடு வழங்கப்பட்டு, அதற்கான பின்னுாட்டமும் பெறப்பட்டு வருகிறது. கைவினைப் பொருட்கள் செய்தல், வாய்ப்பாட்டு, ஓவியம், கையெழுத்து பயிற்சி, பொது அறிவு, யோகா, திருக்குறள் ஒப்புவித்தல், உடல்நலக் கல்வி, ஸ்போக்கன் இங்கிலீஷ், கணித வாய்ப்பாடு படித்து எழுதி காட்டுதல் போன்ற பல்வேறு பயிற்சிகளை 'வாட்ஸ் ஆப்'பில் மாணவர்களுக்கு அனுப்பி,கற்பிக்கப்படுகிறது.

பள்ளி தலைமையாசிரியர் பாஸ்கரராசு கூறுகையில், 'வாழ்க்கை கல்வி நிகழ்ச்சியில் மாணவ மாணவியர் ஆர்வமுடன் பங்கேற்கின்றனர்.தங்களின் பின்னுாட்டத்தையும் உடனுக்குடன் அனுப்புகின்றனர். கொரோனா காலகட்டத்தில் மாணவர்கள் தங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ளவும், நேரத்தை பயனுள்ள வழியில் செலவிடவும் இந்நிகழ்ச்சி உதவுகிறது.பள்ளி திறக்கவில்லை என்றாலும் மாணவர்கள் அடைய வேண்டிய இலக்குகள் இதன் மூலம் நிறைவடைகிறது.வாட்ஸ்ஆப் இல்லாத மாணவர்களுக்கு எஸ்.எம்.எஸ்., மூலம் தகவல் அனுப்பி அவர்களையும் பங்கேற்க செய்கிறோம்' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X