இந்தியா

சோரப்பட்டு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தொழிலாளர் துறை செயலர் ஆய்வு

Added : ஜூன் 26, 2020
Share
Advertisement

புதுச்சேரி : சோரப்பட்டு ஆரம்ப சுகாதார நிலையத்தில், தொழிலாளர் துறை செயலர் வல்லவன் தலைமையிலான குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.

சோரப்பட்டு மற்றும் அதனை சுற்றிலுள்ள பல கிராமங்களில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் வில்லியனுார் தாலுகாவில் சுகாதார பணிகளை கண்காணிக்க நியமிக்கப்பட்ட தொழிலாளர் துறை செயலர் வல்லவன் தலைமையிலான குழுவினர், நேற்று சோரப்பட்டு ஆரம்ப சுகாதார நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இதில், மருத்துவ மனையில் பணியாற்றும் மருத்துவ பணியாளர்களின் எண்ணிக்கை, புறநோயாளிகளின் வருகை, கொரோனா கட்டுப்பாட்டு மண்டலங்களின் விவரம், சோரப்பட்டு பகுதியில் கொரோனா தொற்று அதிகரிப்பதற்கான காரணங்கள் குறித்து கேட்டறிந்தனர்.

தனிமைப்படுத்தப்பட்ட பகுதியிலுள்ள மக்கள் வெளியே நடமாடுவதை தடுக்க மேற்கொள்ளப் பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் கேட்டறிந்தனர்.தொடர்ந்து, அரியூர் ஆரம்ப சுகாதார நிலையத்தையும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். ஆய்வின்போது தொழிலாளர் துறை துணை ஆணையர் முத்துலிங்கம், தொழிலாளர் துறை அதிகாரி சரவணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X