இந்தியா

மீனவர்களுக்கு நிவாரணம் தி.மு.க., வலியுறுத்தல்

Added : ஜூன் 26, 2020
Share
Advertisement

புதுச்சேரி : 'அனைத்து மீனவர்களுக்கும் மீன்பிடி தடைக்கால நிவாரணம் வழங்க கவர்னர் அனுமதிக்க வேண்டும்' என, தெற்கு மாநில தி.மு.க., அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ., வலியுறுத்தி உள்ளார்.

அவரது அறிக்கை:கடலில் மீன் வளத்தை அதிகரிக்க, 60 நாட்கள் வரை மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்படுகிறது. அந்த காலக்கட்டத்தில் மீனவர்கள் தொழிலுக்கு செல்ல முடியாது என்பதால், நிவாரணமாக 5,500 ரூபாயை அரசு வழங்கி வருகிறது.இந்நிலையில், நிதி நிர்வாக சீர்திருத்தம் செய்வதாக நினைத்து, முதியோர் ஓய்வூதியம் பெறும் குடும்பங்களுக்கு தடைக்கால நிவாரணம் கிடையாது என, அரசை மீறி கவர்னர் கிரண்பேடி முடிவு எடுத்துள்ளார். இது, கண்டிக்கத் தக்கது.

கவர்னரின் முடிவு, யாரையும் கலந்தாலோசிக்காமல் ஏதேச்சதிகாரத்தில் எடுக்கப்பட்ட முடிவாக உள்ளது.மீன்பிடி தடைக்காலத்தில் தொழிலுக்கு செல்லாத மீனவர்கள் மட்டுமே பாதிக்கப்படுவதாக கவர்னர் நினைப்பது முற்றிலும் தவறானது. அதுபோல, மீனவர்களுக்கு தரப்படும் ரூ.1,500 ஓய்வூதியத்தை வைத்து ஒரு மாதம் முழுவதும் சாப்பிட்டு விடலாம் என்பதும் மிகப்பெரிய தவறு. இதனை கருத்தில் கொண்டுதான், ஓய்வூதியம் பெறும் மீனவர்களுக்கும், மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசு, மீன்பிடி தடைக்கால நிவாரணம் வழங்கி வருகிறது.

ஜனநாயக நாட்டில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசைவிட யாரும் பெரியவர் இல்லை. இதை உணர்ந்து, அனைத்து மீனவர்களுக்கும் மீன்பிடி தடைக்கால நிவாரணத்தை உடனடியாக வழங்க கவர்னர் அனுமதிக்க வேண்டும். இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X