விடுபட்டவர்களுக்கு நிவாரணம் கோரி சி.ஐ.டி.யூ., சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்| Dinamalar

இந்தியா

விடுபட்டவர்களுக்கு நிவாரணம் கோரி சி.ஐ.டி.யூ., சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

Added : ஜூன் 26, 2020
Share

புதுச்சேரி : விடுபட்ட தொழிலாளர்களுக்கும் கொரோனா நிவாரணம் வழங்கக் கோரி சி.ஐ.டி.யூ., சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

புதுச்சேரி அமைப்புசாரா தொழிலாளர் நலச் சங்க அலுவலகம் எதிரில் நேற்று நடந்த ஆர்ப்பாட்டத்தில், சி.ஐ.டி.யூ., பிரதேச செயலாளர் சீனிவாசன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில், முதல்வர் அறிவித்தவாறு கொரோனா நிவாரணத் தொகை 1000 ரூபாயை, பதிவு செய்துள்ள அனைத்து அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கும் வழங்க வேண்டும், விடுபட்டவர்களுக்கு நிவாரணத் தொகையை அவரவர் வங்கிக் கணக்கில் உடனே செலுத்த வேண்டும் ஆகிய கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.பின், சி.ஐ.டி.யூ., சங்க நிர்வாகிகள், தொழிலாளர் நல அதிகாரி ரவிச்சந்திரனை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

சி.ஐ.டி.யூ., செயலாளர் சீனுவாசன் கூறும்போது, 'அமைப்புசாரா தொழிலாளர் நலச் சங்கத்தில் கடந்த 3 ஆண்டுகளாக பதிவு செய்துள்ள தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்கப்படவில்லை. கொரோனா நெருக்கடி சூழலை கருத்தில் கொண்டு, வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள விடுபட்டுள்ள அனைத்து தொழிலாளர்களுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டோம். உயரதிகாரிகளுடன் பேசி தகுந்த நடவடிக்கை எடுப்பதாக நல அதிகாரி உறுதி அளித்தார்' என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X