இந்தியா

ஜிப்மர் ஊழியர் தற்கொலை

Added : ஜூன் 26, 2020
Share
Advertisement

பாகூர் : மனைவி பிரிந்து சென்றதால் மனமுடைந்த ஜிப்மர் ஊழியர் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

முதலியார்பேட்டை தில்லை நகரை சேர்ந்தவர் அய்யனாரப்பன்,36; ஜிப்மரில் அட்ெடண்டராக வேலை செய்து வந்தார். இவருக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. கருத்து வேறுபாடு காரணமாக அவரது மனைவி, தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.தனியாக வசித்து வந்த அய்யனாரப்பன் வீட்டை காலி செய்து, கடந்த இரண்டு ஆண்டுகளாக தவளக்குப்பம் அடுத்த தானம்பாளையத்தில் உள்ள தனது அக்கா வீட்டில் வசித்து வந்தார்.மனைவி பிரிந்து சென்றதால் மனமுடைந்த அய்யனாரப்பன், நேற்று முன் தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் துாக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

தகவலறிந்த தவளக்குப்பம் போலீசார் சென்று, உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X