இந்தியா

வீடு புகுந்து பெண் மீது தாக்குதல் இருவருக்கு போலீஸ் வலை

Added : ஜூன் 26, 2020
Share
Advertisement

பாகூர் : மீன்பிடி தொழிலில் பங்குதாரராக சேர்க்க மறுத்த மீனவரின் வீடு புகுந்து, தாயாரை தாக்கி, மோட்டார் சைக்கிளை சேதப்படுத்திய இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

கிருமாம்பாக்கம் அடுத்த நரம்பை சுனாமி குடியிருப்பைச் சேர்ந்தவர் ஜெயபிரகாஷ், 20; மீன்பிடி தொழில் செய்கிறார்.அதே ஊரைச் சேர்ந்த கிரிதரன், தீனதயாளன் ஆகியோர், தங்களையும் மீன்பிடி தொழிலில் பங்குதாரராக சேர்த்துக் கொள்ளுமாறு கேட்டதற்கு, ஜெயபிரகாஷ் மறுப்பு தெரிவித்துள்ளார்.நேற்று முன்தினம் மாலை வீடு திரும்பிக் கொண்டிருந்த ஜெயப்பிரகாஷை வழிமறித்து, கிரிதரன், தீனதயாளன் ஆகியோர் தகராறு செய்துள்ளனர். பின்னர் ஜெயபிரகாஷ் அங்கிருந்து சென்று விட்டார்.

ஆத்திரமடைந்த கிரிதரன், தீனதயாளன் இருவரும் ஜெயப்பிரகாஷ் வீட்டுக்கு சென்று, அவரது தாய் புனிதாவை தடியால் தாக்கியுள்ளனர். அங்கிருந்த பைக், மொபைல்போனை உடைத்து சேதப்படுத்தி விட்டு தப்பிச் சென்றனர்.காயமடைந்த புனிதா, அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். புகாரின் பேரில், கிரிதரன், தீனதயாளன் மீது கிருமாம்பாக்கம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X