இந்தியா

கொரோனா தொற்று விழிப்புணர்வு பிரசாரம்

Added : ஜூன் 26, 2020
Share
Advertisement

புதுச்சேரி : முத்தியால்பேட்டை சுகாதாரம் மற்றும் நல்வாழ்வு மையம் சார்பில், கொரோனா வைரஸ் தொற்று பரவல் தொடர்பாக, வாகனத்தில் சென்று விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.

சுகாதார நிலைய மருத்துவ அதிகாரி நிர்மல்குமார், தீபிகா ஆகியோர் விழிப்புணர்வு பிரசார வாகனத்தை துவக்கி வைத்தனர். சுகாதார ஆய்வாளர் சரவணன், ருக்குமணி முன்னிலை வகித்தனர்.சுகாதார உதவியாளர்கள் ஜவகர் ,சந்தோஷ்குமார், ரேணுகாதேவி ஆகியோர் மேற்பார்வையில், வைத்திக்குப்பம், சோலை நகர், டி.வி. நகர், கணேஷ் நகர் மற்றும் கொரோனா தொற்றால் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் பிரசார வாகனத்தின் மூலம் விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டது.இதில், செவிலியர் அதிகாரிகள், மருந்தாளுநர்கள், கிராமப்புற செவிலியர்கள், ஆஷா பணியாளர்கள், மருத்துவமனைஊழியர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X