சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மோதலால் வெளியூரில் வசித்த 28 குடும்பத்தினர் ஊர் திரும்பினர்

Added : ஜூன் 26, 2020
Share
Advertisement

பண்ருட்டி : பண்ருட்டியில் இரு கோஷ்டிகளிடையே ஏற்பட்ட பிரச்னை காரணமாக 3 ஆண்டுகளாக வெளியூரில் வசித்து வந்த 28 குடும்பத்தினர் அதிகாரிகள் முன்னிலையில் சொந்த ஊரில் மீண்டும் தங்க வைக்கப்பட்டனர்.

கடலுார் மாவட்டம், பண்ருட்டி, அம்பேத்கர் நகரில் கடந்த 2017ல் அதே பகுதியை சேர்ந்த கலைமணி - கனிமொழி ஆகிய கோஷ்டியினரிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதில் இருதரப்பினர் மீது 20 வழக்குகள் உள்ளன.இதன் காரணமாக கனிமொழி தரப்பை சேர்ந்த 28 குடும்பத்தினர் கடந்த மூன்று ஆண்டுகளாக வெளியூரில் வசித்து வந்தனர். இதனையடுத்து, கனிமொழி தரப்பினர் பண்ருட்டி இன்ஸ்பெக்டர் அம்பேத்கர், தாசில்தார் உதயகுமார் ஆகியோரிடம், தங்களது வீடுகளில் வந்து மீண்டும் தங்கிட ஏற்பாடு செய்யுமாறு மனு அளித்தனர்.

இது தொடர்பாக கடந்த 19ம் தேதி பண்ருட்டி தாலுகா அலுவலகத்தில் நடந்த பேச்சு வார்த்தையில் சுமூக தீர்வு காணப்பட்டது.இதனையடுத்து, தாசில்தார் உதயகுமார், இன்ஸ்பெக்டர் அம்பேத்கர் ஆகியோர் முன்னிலையில், கனிமொழி தரப்பைச் சேர்ந்த 28 குடும்பத்தினர், நேற்று அவரவர் வீடுகளில் மீண்டும் தங்க வைக்கப்பட்டனர். இரு தரப்பினருக்கும் இடையே இணக்கம் ஏற்படுத்தும் வகையில், அறிவுரை கூறி, இனிப்பு வழங்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X