சம்பவம் செய்தி

தமிழ்நாடு

போதை பொருட்கள் மாயமான விவகாரம் எஸ்.ஐ., உட்பட 3 பேர் ஆயுதப்படைக்கு மாற்றம்

Added : ஜூன் 26, 2020
Share
Advertisement

பரங்கிப்பேட்டை : போதை பொருட்கள் மாயமான விவகாரத்தில், பரங்கிப்பேட்டை சப் இன்ஸ்பெக்டர் உட்பட மூவர் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

கடலுார் மாவட்டம், பரங்கிப்பேட்டை அடுத்த சி.புதுப்பேட்டை கடற்கரையோரத்தில், கடந்த மார்ச் 14ம் தேதி பண்டல் ஒன்று கரை ஒதுங்கியது. இதை பார்த்த அப்பகுதி மக்கள் அளித்த தகவலின்பேரில், பரங்கிப்பேட்டை சப் இன்ஸ்பெக்டர் ஆனந்தன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, பண்டலை சோதனை செய்தனர்.அதில், 8 பாக்கெட்டுகளில் போதைப் பொருட்கள் இருப்பது தெரியவந்தது.அவற்றை சப் இன்ஸ்பெக்டர் ஆனந்தன் மற்றும் போலீசார் கைப்பற்றி பரங்கிப்பேட்டை காவல் நிலையத்திற்கு எடுத்து வந்து வைத்தனர். இது குறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கவில்லை.


கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு, மாமல்லபுரம் கடற்கரையோரத்தில், போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்ட தகவல் வெளியானதால், கிராம மக்கள் வெளியில் சொல்லிவிடுவார்களோ என அச்சமடைந்த போலீசார், உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.அதன்பேரில், டி.எஸ்.பி., கார்த்திகேயன், பரங்கிப்பேட்டை போலீஸ் நிலையம் சென்று போதைப்பொருள் பாக்கெட்டுகளை பார்வையிட்டு, கிராம மக்கள் மற்றும் சப் இன்ஸ்பெக்டர் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தினார்.கைப்பற்ற 8 போதைப்பொருள் பாக்கெட்டுகளில், தற்போது நான்கு பாக்கெட்டுகள் மட்டுமே கணக்கு காட்டப்பட்டுள்ளது.

மீதமுள்ள நான்கு பாக்கெட்டுகள் என்ன ஆனது என தெரியவில்லை.அவற்றின் மதிப்பு கோடிக்கணக்கான ரூபாய் இருக்கும். அதையடுத்து, சப் இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட போலீசாரிடம் டி.எஸ்.பி., கார்த்திகேயன் நேற்றும் தீவிர விசாரணை நடத்தினார்.இந்நிலையில், சப் இன்ஸ்பெக்டர் ஆனந்தன், தனிப்பிரிவு சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் ராம்குமார், போலீஸ் பாக்கியராஜ் ஆகியோரை கடலுார் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து எஸ்.பி., ஸ்ரீஅபிநவ் உத்தரவிட்டார்.சப் இன்ஸ்பெக்டர் உட்பட 3 பேர் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்ட சம்பவம், பரங்கிப்பேட்டை போலீசார் மத்தியில்,கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X