சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வழிப்பறியில் ஈடுபட்ட இருவர் குண்டாசில் கைது

Added : ஜூன் 26, 2020
Share
Advertisement

கடலுார் : கடலுாரில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட இருவர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

கடலுாரில் தனியாக சென்ற பெண்களிடம் தொடர்ந்து வழிப்பறி சம்பவங்கள் நடந்தன. இதுகுறித்து கடலுார் தேவனாம்பட்டினம், கடலுார் நகர போலீசார் வழக்கு பதிவு செய்து, நெய்வேலி அருகே சின்னகாப்பான்குளத்தை சேர்ந்த சின்னதுரை மகன் சிவராமன், 39; அரியலுார் மாவட்டம் காடுவெட்டியை சேர்ந்த ராமலிங்கம் மகன் செல்வமணி, 32 ஆகிய இருவரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 37 சவரன் தங்க நகை பறிமுதல் செய்யப்பட்டது.

கைது செய்யப்பட்ட இருவரும் தொடர்ந்து பெண்களிடம் வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டதாலும், அவர்களின் நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு, குண்டர் சட்டத்தில் கைது செய்ய, கலெக்டருக்கு எஸ்.பி., ஸ்ரீஅபிநவ் பரிந்துரை செய்தார். கலெக்டர் அன்புச்செல்வன் உத்தரவுபடி இருவரும் குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைக்கப்பட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X