கள்ளக்குறிச்சியில் பாதிப்பு 470 ஆக உயர்வு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கள்ளக்குறிச்சியில் பாதிப்பு 470 ஆக உயர்வு

Added : ஜூன் 26, 2020
Share

விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் கடலுார் மாவட்டங்களில் கொரோனா தொற்றால் பாதித்தவர்கள் விவரம் வருமாறு:விழுப்புரம் மாவட்டத்தில் 655 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்களில், 12 பேர் இறந்தனர்.

அவலுார்பேட்டையில் 56 வயது மின்வாரிய ஊழியர் உட்பட 40 பேருக்கு நேற்று கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.இதனால், விழுப்புரம் மாவட்டத்தில் பாதிப்பு 695 ஆக உயர்ந்துள்ளது.கள்ளக்குறிச்சிகள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் ஏற்கனவே 448 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், 158 பேருக்கு பரிசோதனை செய்ததில், 25 பேருக்கு நேற்று தொற்று உறுதியானது.இதில், கோயம்புத்துார், சேலம் மாவட்டத்தில் பரிசோதனை செய்ததில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 7 பேரும் அடங்குவர்.இதனால், தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 473 ஆன நிலையில், 3 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள் என்பதால், மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 470 ஆக உள்ளது.

ஒருவர் உயிரிழந்துள்ளார். 325 பேர் குணமடைந்துள்ளனர். இத்தகவலை கலெக்டர் கிரண் குராலா தெரிவித்துள்ளார். கடலுார் கடலுார் மாவட்டத்தில் நேற்று 6 பேருக்கு தொற்று உறுதியானது.இதனையடுத்து மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 916 ஆக அதிகரித்துள்ளது. மாவட்டம் முழுவதும் நேற்று வரையில் 529 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X