சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பைக் மீது டிராக்டர் மோதிய விபத்தில் 2 மாணவர்கள் பலி

Added : ஜூன் 26, 2020
Share
Advertisement

திருக்கோவிலூர் : அரகண்டநல்லுார் அருகே பைக் மீது டிராக்டர் மோதிய விபத்தில் இரண்டு வாலிபர்கள் இறந்தனர்.

விழுப்புரம் மாவட்டம் , அரகண்டநல்லுார் அடுத்த ஒட்டம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் மகன் பிரவீன்குமார், 18; கண்டாச்சிபுரத்தில் உள்ள தனியார் ஐ.டி.ஐ.,யில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவரது நண்பரான அதே ஊரைச் சேர்ந்த வேலு மகன் சஞ்சய், 19; சென்னையில் ஏசி மெக்கானிக் படித்து வந்தார்.இருவரும் நேற்று மதியம் 2:15 மணி அளவில் பைக்கில் வேட்டவலம் சென்று ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். இவர்கள் வீரப்பாண்டி பெட்ரோல் பங்க் அருகே வந்த போது எதிரே வந்த டிராக்டர் திடீரென பெட்ரோல் பங்க் பக்கமாக வலது புறம் திரும்பியது. அப்போது நிலைதடுமாறி பைக் மீது மோதியது.

இதில் பைக்கில் வந்த இருவரும் துாக்கி வீசப்பட்டு இறந்தனர். அரகண்டநல்லுார் போலீசார் வழக்குப் பதிந்து , விசாரணை செய்துவருகின்றனர்.தப்பியோடிய டிராக்டர் டிரைவரை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X